ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

லோபமுத்திரா காவிரி நதியான கதை
அகத்திய முனிவர் ஒரு சமயம் லோபமுத்திராவை நீராக மாற்றி தமது கமண்டலத்துள் அடக்கி வைத்திருந்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. தன்னை நீண்ட காலம் தனியாக வைத்திருந்ததை லோபமுத்திரா உணர்ந்தவுடன், கமண்டலத்திலிருந்து அவள் ஒரு நதியாக பெருக்கெடுத்து
ஓடலானாள். முனிவர்களின் சீடர்கள் அவளைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். ஆனால், அவளோ பூமியில் பாய்ந்து ஓடியதால், அவளது பிரவாகத்தை  அவர்களால் நிறுத்த முடியவில்லை. பிறகு, அவள் பகமண்டலா என்ற இடத்தில் மீண்டும் உதயமானாள். பல காலத்திற்குப் பிறகு, அகத்திய முனிவர் அவளைத் தேடிய போது, காவிரி நதியின் ரூபத்தில் அவளை அவர் அடையாளம் கண்டார். அவள் அகஸ்திய முனிவருடன் அவரது பத்தினியாக வாழ்ந்து, நதியாக மக்களுக்கு உதவியாக இருந்தாள் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னொரு புராணக்கதையும் உண்டு. அகத்தியர் தனது பத்தினியைத் தம் கமண்டலத்துள் நீராக வைத்திருந்ததாகவும், கணேச பகவான் காக வடிவில் வந்து அவரது கமண்டலத்தைக் கவிழ்த்து, அதிலுள்ள நீரை ஓட விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நதியாக ஓட ஆரம்பித்ததும், அவள் காவிரி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள் – காவேராவின் மகளானதால் அப்பெயர் வந்தது. புண்ணிய நதியாக வேண்டும் என்ற விருப்பத்தால், காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம்   கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே  புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. 
அப்படி பட்ட அன்னைக்கு அய்யனுக்கு அளித்த காயத்திரி மந்திரம் 
ஓம் காவேர புத்தீரிச வித்மகே
காரூண்ய ரூபாய தீமகே
தந்நோ : ஸ்ரீலோபமுத்ரா தேவி பிரஜோதயாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.