சனி, 28 ஜனவரி, 2017

Friday, January 20, 2017

Thus Spake the KING - Bhrigu Maharishi on Dhanur Rohini in Maruderi









அண்ட பகிரண்டமாய் அப்பாலுக்கு அப்பாலாய்  
நின்ற ஈசன் திருவடி போற்றி 
அணுவுக்குள்அணுவாய் நின்றஅரனின் திருவடிகளை  பணிந்து
பிருகுயான் சீவமதின் வாக்கு உரைக்க 
The Round Universe and Space surrounding that, beyond the beyond
stands the feet of Eshwar that I praise
Inside the atom stands the finer atom feet of Aran(Supreme) and I bow to him
And as Bhrigu here are my verses of Seevan (Life force)
உத்தமதருணம் தனுர் ரவி ரோகிணியில் 
உயர்ந்ததொரு சோதி கொண்டு 
எம்மக்கள் எமை வேண்டி நிற்க 
நாங்களும் வாக்குகளை அருளிசெய்வோம் 
In the Apt-time of Dhanur Month's Rohini Star
those who begun with the exalted Jyothi
are my kids who stood seeking me
here are the "verses of blessing" for them
அருள்செய்யும் தருணம் அதில் 
ஆற்றலாய் நின்றதொரு வாலை யவள் 
அன்னை காமதேனுமுதல் நந்தியம்பெருமான் சூழ 
இன்றுமே யான்களுமே எழுந்தருளி 
In this time of blessings now with 
great energy stood the Vaalai Lady (The Sakthi worshipped internally by Siddhars)
From Mother Kamadhenu to Lord Nandhi surrounded by all
Today I/We arose at this place
எங்களது குருதிவம்சமான மஹாலக்குமியின் 
சோடசநிலையை உணர்ந்து யாமும்உரைப்பது யாதென்றால் 
பூரண இப்பூசையதில் பலவிதஇடையூறுகளும் கொண்டு 
இம்மாந்தர்கள்சூழ கொண்டதொரு தடைகள் இடையூறுகள் 
My Gene/Blood and Progeny is Mahalakshmi's
Sixteen forms, I sense that and what I say now is
"In this Complete Puja with many hindrances
People reach here, for their hindrances and problems"
யாவையும்களைந்து செய்திட்ட பூசையதில் பூரணமாய் யாம்மகிழ்ந்தோம் 
இத்தலத்தில் பலவாண்டாய் எமை துதித்து 
வேண்டி நின்ற நிலைகளை கண்டு பூரணமாய் இன்றும் இத்தலத்தில் 
நாங்களும் நிலைபெற்று இருந்தோம் 
For all that to be removed is this puja", I'm completely happy about it
In this place many stood worshiping at me for many years
Understanding that state whole heartedly(Completely) even today in this place
We stand here Permanently blessing all
ஆசிரம தர்மத்தில் நீர்நிலைகள் இன்னும் பிற 
ஆவினது நிலைகளும் சூழ இத்தலத்தில் 
யாங்கள் அளிக்கும் பதினாறு பேறுகளும் 
வழங்கவல்ல அருளாசி பெற்றதொரு தலமாய் 
Per Ashram's Dharma from Holy water and other things like
Cows surrounded in this great place now
Is what we bless and give you all the 16 levels of Different State Blessings (Refer Below)
Thus we pronounce that this place is capable of providing 16 States for Seekers
புகழ் - Fame
கல்வி - Education
ஆற்றல் - Power and Ability
வெற்றி - Victory
நன்மைகள் - Goods
பொன் - Gold
தானியம் - Grains
அழகு - Beauty
இளமை - Youngerness
நல்வாழ்வு - Goodness
அறிவு - Great Mind
பெருமை - Excellence
துணிவு - Courage
நோயின்மை - Health
நுகர்ச்சி - Experience/Enjoyment
நீண்ட வாழ்வு - Longevity 
இது நிலைக்குமென்று நிலைத்து இருந்தோம் 
இத்தரணியிலே யான்களும் நிலைபெற்றதொருதலமாய் இன்றுவிளங்கும் 
சத்தியமாய் எங்களது தலம்நாடி வந்தோர் 
சன்மார்க்கநெறி வழுவாது நிற்க இன்று ஆசியீந்தோம் 
This States to get Stationed here is why we are Stationed here
In this world this place will be renowned as Place Stationed by Me and Siddhas always from today onwards
I promise now that for people who seek and come to this place
I will ensure they will follow Sanmarga(Path of truth) without being deviated or distracted, So is my blessings today
உரைத்திடும் எண்ணமதில் மாந்தர்க்கு உண்டான 
சந்தேக குற்றங்களை தீர்க்க வல்லதாய் 
இன்று வினாவிற்கு வாக்கு அளிப்போம் 
யாதொரு வழியிலும் நீங்கள் உற்றதுயரங்கள் 
As I say, many people in their mind and thoughts
Have Doubts and Errors, which I wish to Clear and Remove them
And for that question as Answer I'm saying this
In Whatever forms the problems that you have faced
 
குருவழியால் வந்தது என்று நிந்தியாமல் 
தன்கருமத்தை அழிக்கவல்ல  ஒர் வாய்ப்பாக 
எங்களது அருள்பாதம் நின்றிருக்க 
வருத்தம் கொள்ள வேண்டியதில்லை 
Is not through Guru. So don't blame your Guru for your Problems
and instead think that as an Opportunity to Remove/Eliminate your Karma
That is Why our (All Gurus) Holy Feet Stands for
Hence don't every Worry about anything
அவனவன் உற்றகருமத்தை அனுபவித்து தீரவேண்டும் என்றாலும் 
அருள்நிழலாய் யான்களும் இருந்து இன்றுவரை பாதுகாத்து வந்தோம் வருவோம் 
சத்தியமாய் எம்மக்கள் யாதொரு துயரத்திலும் ஆட்படாமல் நிழலாய் நின்று காக்க 
எங்களது பரிவாரம் இன்றுமுதல் வழித்துணையாய் வரும் என்று சத்திய வாக்கு தனை ஈந்தோம் 
Per one's karma he/she is destined to experience that karma, however
as Holy-Shadow I/we stand beside you and have been Protecting You till now, Will Protect You
The truth is, we stand as Shadows for our kids, protecting and ensuring that you don't go through any sufferings
My Parivaram (All holy forces, angels, gods and siddhas following Bhrigu) will come along with you and this is a Verse of Promise that I give it you all
நிலைபெற்றதொரு பூசையதில் யான்களும் உரைத்தபடி மருந்துவழியிலும் 
ஓரிருகுறைகள் எண்ணத்தில் கண்டாலும் அவற்றிற்குஈடாய் 
மாற்றுமருந்தை நிலைபெறசெய்து பூரணமாய் நூற்றிஎட்டைதொட்டு நூதனகுருமருந்தாய் 
இதுவே நிலைத்தஒருவழியாக நாளும்நாளும் நிற்கயாமும் ஆற்றல் ஈந்தோம் 
In this Puja as pronounced by us in Medicines
though there was shortage in Mind, Equivalent to that
there were different medicines that compensated the 108 as a special Guru Medicine
This will become a standard medicine here day by day so is my energy based blessing to that
உரைத்திடும் மாந்தர்கள் எண்ணிக்கை தன்னை அறிந்து  நின்றாலும் 
இக்காலத்தில் தசமாறு லக்குமிகளும் அவர்கள்பரிவாரங்களும் அவற்றின் சத்தை உன்றது 
அவருக்குரிய அன்னம் நிறைந்தவகையில் செய்தவிதம் கணங்கள் த்ரிப்தியுற்று ஆசியீந்தது 
குறித்திடும் கோவினதுதர்மமும்  நிலைபெற்றதொரு அன்னதர்மமும் இனிசெழிக்க தசமாறு தேவிகளும் ஆசியீந்தார்கள் 
Though the count of people got changed
This time 16 forms of Lakshmi and their Parivar consumed the energy of the food
So the food was in Abundance hence the "Ganams" where happy and satisfied by consuming it and blessed everyone
So Gho-Dharma (Cow Dharma) and Stationed Anna Dharma to flourish was the blessings of 16 Lakshmi Devis
என்தவப்புதல்விகள் நீக்கமற அழைத்தார் வருவார்கள் 
நித்தியமாய் தைரிய ஆற்றல்களும் நிறைந்திருக்கும் 
யாதொரு காலத்திலும் வீண்குற்றங்கள் குறைகளின்றி 
எம்மைப்பற்றி  வழுவாமல் அதிலிருக்க அரவணைத்து அன்புபாராட்டி 
My Divine-Daughters will appear when you call them with whole-heart /Pure Mind
For ever the Energy of Courage will be in Abundance and Filled in the Place
At any anytime and Period with out flaws and Errors
To follow me without deviating, thereby coming together with Love
செய்திட்ட விதம்அதனில் பிழைஒன்று உரைப்பில் 
எமக்கு யாதொரு நிலைகளும் பிழைக்கான இயலா நிலையில் 
இன்று பரிபூரண பரிபூரணாமாய் ஆசியை ஈந்தோம் 
குறித்திடும் தசமாறு தேவிகளின் நிலைநிறுத்தி நின்றதொரு 
And the way things were done, to complain on One mistake
And for me in any state to find flaws it is impossible
So today I Completely and In fullness give my blessing to all
As mentioned for 16 Devi to get stationed for people who came
மங்கள பொருள்களை மங்களபெண்டிர்க்கு ஈந்து 
மங்கள நீர்த்தனை அவரவர் இல்லங்களில் தெளித்து 
பரிபூரணமாய் திருமகள் ஆற்றலை பெருகசெய்வீர் 
உத்திரதேசமுதல் தட்சிண தேசம் வரை 
Give the divine goods to the good women
ask the divine water to be splashed at their homes
to get complete blessings of the great Thirumagal (Mahalakshmi)
From the North to South in a Stretch
காசிமுதல் ராமேஸ்வரம் வரை பரிபூரணமாய் என்தனது 
ஆசிரம தரம் நிலைபெறும் தருணமிதுவென்ற உரைக்ககண்டோம் 
இனி எங்களது ஆசிரமநிலைக்கு உகந்ததொரு பீடமாய் இதுவிளங்கும் என்று 
ராஜபீடத்தில் அமர்ந்து பரிபூரணமாய் எமைவேண்டி நின்ற மாந்தர்க்கு 
From Kasi to Rameshwaram with completeness My Ashram's Dharama
will be Formed and Stationed  From Now On as I speak
Henceforth My Ashrama Code & Principle this will be highly Seeked Sanctum and this I say
From Sitting on Rajapeedam that those who worshiped me in completeness .
யாதொரு நிலைகளிலும் ஒருகுறையின்றி குருபீடமாக 
அருளாசி புரிய சித்தம் கொண்டோம் மருதேரி என்னும் இத்தலத்தில் 
யாதொரு நிலைகளிலும் சன்மார்க்க தர்மங்கள் நிலைபெற்று இருக்க 
பரிபூரண ஆசி இன்று எம் வாக்கில் உரைத்தோம் 
For them at Anypoint/ State this place will be flawless GURUPEEDAM
And from here to bless all is my mind, from this Place called MARUDERI
At Any state Sanmaarga Dharma to be practiced and stationed here
Is my Whole hearted blessings in today's Verses
சீலமாய்  நின்றதொரு சித்த மார்கத்தில் 
பற்றி நின்ற மாந்தர்களுக்கு பதவி மோட்சங்கள் அளிக்க வல்லதாய் 
யாதொரு காலத்திலும் பூசைவரைகொண்டோர்க்கு கர்மங்கள் இல்லை 
அவர்கள் காலங்கள் பின்னும் கர்மங்கள் இல்லை 
In discipline is the great Marga of Siddhas
It is capable of giving higher posts and Moksha (Freedom) to those who follow 
In all times those who followed this marga will have no Karma
Even after their times there is no Karmas
சோதி கண்டவர்க்கு சிவன் ஆற்றல்கள் பரிபூரணமாய் நிற்க 
சவ மாந்தர்க்கு உரிய சடங்குகளை அற்று சோதியேற்றி 
அவர்கள் ஆன்ம சாந்தி அடைய எந்நாளும் 
எந்நாளும் வணங்கி போற்றி மகிழ்வீர் 
For People who have Seen the Jyothi(Light) the energy and ability is that if Shiva's  
away from the procedure of death is due to the vision they had with the Jyothi (Light)
Pray for the Aanma Shanthi from asked and Pray
Pray/worship them on daily basis and flourish (Ref: Bhairavas in Maruderi/ Others who all saw the Jyothi here)
இக்காலமதில் நோய்க்குறைகள் பிணிக்குறைகள் மனோகுறைகள் யாவையும் நீக்கவல்ல ஆசித்தனை ஈந்தோம் 
சிவசக்தி ஸ்வரூபமாய் ஆண்பெண் தத்துவமாய் யாவரும் இன்புற்று வாழ 
நல்லாசி புரிந்து இக்காலத்தில் பரிபூரண நிலையை தொட்டு 
நடைமுறை வாக்குதனை அருளிசெய்தோம் சாந்தி 
In this time to heal from diseases, illness and mental sickness is my blessing now
As Shiva-Shakthi Form and as Male-Female Creation for all to live in happiness
is my blessings now to reach a great absolute state
is my extempore verses as blessing to all..SHANTHI
 

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.