ஞாயிறு, 16 அக்டோபர், 2016

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம் பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம் இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம் முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம் ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)
உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம் உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம் பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம் பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம் வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. (1507)
ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம் அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந் தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந் திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம் விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம் நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)
பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட் படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ் சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந் துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம் வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம் நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)
ஒரு முறை பதம் பிரித்து வாசித்தால் - சில அரிய வார்த்தைகள் தவிர்த்து - எளிமையாய்ப் புரிந்துகொள்ளலாம். முடியாதவர்களுக்காக இதன் பொருள்:
பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம். பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம். தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.
காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம். மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம். சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம். இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.
மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம். புளித்த தயிரை உண்போம். முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம். பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.
ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.
கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம். வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.
மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம். நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.
இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.
பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?

செவ்வாய், 11 அக்டோபர், 2016

தன்வந்த்ரி - மருதேரி

DHANVANTRI-FOOD, MEDICINE AND SEEDS


தகையான சித்தர்முறை உணவும் மருந்தும்
தரணியிலே நுட்பம் அதாய் வரையறுக்க 
 
For Proper Siddhar methods on Food and medicine
In the world with details to group and categorize
 
-------------------------------------------------------------------------------

வரையறுக்க ஆசிரம தர்மம் ஒன்றாய்
விதிப்படியே கலியதனில் விஞ்ஞானத்தும் 
கரைகடந்த ஆற்றலத்தின் ஓர் துளியாய் 
குவலயத்தின் உயிர்வடிவாய் நின்றது எல்லாம் 

To categorize as one in ashram's dharma
as destined in kaliyuga by Scientific means
From beyond the great power as a drop
Manifested in worlds as different life forms (Seeds)

--------------------------------------------------------------------------------- 
நின்றதெல்லாம் வணிகநோக்கம் அடிமைநோக்கம் 
நிலைப்படுத்த கொண்டதொரு யுக்தி எல்லாம் 
நன்மைதரா சத்ரு மித்ரு நிலையறியா 
நிகழ்த்திட்ட விதியறியா செய்த மாற்றம் 

Those life forms (Seeds) are seen as business and employment opportunities
The ideas & methodologies used till now claiming stabilization (Increase Availability of Food)
Aren’t good due to the lack of understanding (+ and -)
Thus done are changes without an understanding of destiny and rules

------------------------------------------------------------------------------------------------
மாற்றமதால் உணவு வகை அமிர்தபாகமதில் 
மறைப்பான அசுரகுணம் உள் ஓங்கி 
உற்ற பிணி உயிரணுவாய் அறியவொணா 
உணர்வற்ற நிலைதன்னால் மருந்தும்  ஏற்கா 
 
Due to the changes in the Amrit Paga (Nectar of food)
The hidden Asura Guna (Toxic Nature) takes a raise inside (inside one's body)
Thus illness is not traceble by the life force atom
In body that will lack sensitivity and refuse medicine


--------------------------------------------------------------------------------------------------
ஏற்காத மானுடங்கள் பீடை பற்றி 
இயல்பான நிலைமாறி நின்றகுறை விலக 
பற்றிடும் எங்களது குடிலம் தன்னில் 
பூரணமாய் மானுடர்க்கு பயனளிக்கும் வகை 

For the bodies that are refused get inflicted
And stood different from natural state; for their cure
In our kudilam (Arul Nilayam - Bhrigu Muni)
By providing complete benefits to humankind

---------------------------------------------------------------------------------------------------
வகையான அகத்தெளிவும் மாயை நீங்க
வாகடத்தின் முதன்மையான சித்தர்கள் ரிஷிகள் 
தொகைப்படுத்த ஆதிமூல தன்வந்திரி தான் 
தலைமதில் எழுந்தருள ஆசி செய்தோம் 

By giving inner clarity that drives away Maya (uncertainity)
The Primary Rishis and Siddhas of Medicine
To Group and the Head of all is Dhanvantri
We blessed for him to raise and bless u all in Maruderi
--------------------------------------------------------------------

செய்தவிதம் ரவிநீச்ச காலம் தன்னில்
சிரத்தையுடன் உலகநலம் அடைய வேண்டி 
மெய்யுருக வேண்டியுமே மும்மூர்த்திகள் ஆசியுடன் 
மறைந்ததையே மீட்டெடுக்கும்  வல்லமைதான் இருக்கு 

Thus in month of Aipasi (Time when sun's power is less)
With deep dedication for the goodness of earth
Seek him with devotion; with Trimoorthi's blessings
To retrieve the irretrievable is the blessings


--------------------------------------------------------------------------------------
இருக்கவே மந்திரங்கள் நாத சித்தர் 
இறைநிலையில் சப்தமுடன் வெள்ளிச்சமாகி 
குருத்தலமாய் நின்றிருக்க ஆற்றலெல்லாம் கூடி 
குணங்கள் எல்லாம் மாறி பக்குவமாகும் +

Is the blessings if magical Nada Siddhas from
Their state of bliss express them as sound and light
As the places of Guru with all types of blessing and energy
Provide changes to the goodness of required


-------------------------------------------------------------------------------------------------

ஆகும்விதம் தன்வந்த்ரிக்கு சிறப்பு செய்ய
அமிர்தகலசமுடன் நீரம்சம் கொண்ட மாலோன் 
பகமதாய் தேவர்களுக்கு அவுஷத தலைவன் 
பிறப்பிற்கும் காப்பிற்கும் அதிபன் ஆவான் 

Thus by providing obeisance to Dhanvantri
The Malan who is of watery nature has the Amrit Kalas (Nectar Pot)
Provides the Ousadham part of nectar to Devars
The one who is responsible for birth and preserving

 ---------------------------------------------------------------------------------------------------
ஆனவிதம் அப்பூவிலே ஐந்தும் நிறைந்து
ஆண்பெண்ணாய் உயிராற்றல் பெறுக செய்து 
நான்கு யுகமதிலும் பல்லுயிரும் தொழுதுயேற்றும் 
நாதனையே எங்கள் உடன் கூடி 
 
He as the water has the panchabootha (5 elements) filled in it
As + and - (male and female) increases the life-force / energy
In all 4 yugas worshiped and praised by all living beings
Is the Nadhan who comes along with us here


---------------------------------------------------------------------------------------------------
கூடியே பரிமளிக்க இதுமேல் யோகமாம் 
His rendezvous will glitter and bring in great Yogam

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.
1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

புதன், 5 அக்டோபர், 2016

தன்வந்த்ரி மருதேரி கோட்டத்தில் எழுந்தருள சித்தம்- 22nd October / Dhanvantri’s Sittham to Sanctify Maruderi & Congregation on 22nd-OCTOBER



 


குருவிழா -தன்வந்த்ரி மருதேரி கோட்டத்தில் எழுந்தருள சித்தம்- 22nd October / சனிக்கிழமை (காலை - 7:30 முதல் ) 
Dhanvantri’s Sittham to Sanctify Maruderi & Congregation on 22nd-OCTOBER



சண்முகனின்  பொற்கமலம் பாதம் போற்றி
சாற்றிடவே அகத்தியனும் சீவ வாக்கை
கண்டதொரு பிருகுமுனி குடிலம் தன்னில்
கருவாக நின்றதோர் சோதி மார்க்கம்

Obeisance To Six faced (Lord Muruga/karthikeya) Lord's Golden Feet  
So is my (Agasthya) Jeeva verses
As observed in the Kudilam of Bhrigu muni
The marg of Jyothi stands as the center / core

மார்கமதில் திங்கள்தோறும் நிகழ்த்தும் பூசை
மானுடத்திற்கு மகத்துவங்கள் அளிக்கும் வல்லமையாய்
சீர்பெற்ற மருதேரி என்னும் தலமாய்
சித்தர்கள் அணி வகுக்கும் கோட்டமாகும்

The monthly Poosai happening in this Marg
Provides higher level of greatness to Humanity
in the gracious place of Maruderi (Bhrigu Kudil)
A place where Siddhars Congregate

அகுமொரு குரு நிமித்த வாக்கு கேட்டு
அமைந்ததொரு இயற்கையதாம் வழிபாடு முறையில்
ஓதிட்டோம் அசிரம தர்மம் ஒப்பாய்
ஒப்பில்லா அரச தர்மம் இடமதாகும்

To congregate based on verses Gurus provide
is the place where reverence is in a natural manner
is this place with dharma meant for ashram
Also a place with that of King's Dharma

அகுமொரு அரச அமைச்ச குருநிலைகள்
அவுஷதநிலை அஞ்ஞானம் போக்க வல்லதாய்
வாகுடைய பஞ்ச தர்மம் கட்டமைப்பாய்
வகுத்தவிதம் ஆதியானசோதி முதன்மை கொண்டு

That provides King, Minister and Guru levels
Medicinal level and Agnana-Cure (Unawareness and Ignorance) 
Thus form the basis of Pancha dharma
and with the Adhi-Jyothi as prime and of prominence

கொண்டுமே வழிநடத்த சித்தம் உள்ளோம்
கண்ணுற்ற பெண்திங்கள் கடந்த தூக்கு
பின்னமுற பானுவவன் சஞ்சார காலம்
பிருகுமுனி ரோகிணியில் மார்கத்தோர் பூசை

with prominence we have the Sittham to Guide
in this time after the Puratasi Month
and in the time of Bhanu
is the Rohini Posai of Bhrigumuni Marg people

பூசையுடன் துலாரவி புணர் பூசமதில்
பூரணமாய் பிணிக்குறைகள் மன குற்றங்கள்
வசையெனுமோர் துர்கஷ்டம் மாந்தர்க்கு நீங்க
வைத்தியநாதன் தலம் உறைந்த தன்வந்த்ரிதான்

For-Puja in Thularavi Punarpoosam
As Poorna Relief for Disorders, Mind-sickness
Profanity(Curses) Pain and Negativity removal for Humanity
The one belonging to Vaitheeswaran is the Dhanvantri

தானெழுந்து அருளாசி தரவே சித்தம்
தக்கபலன் கரிவாரத்தில் உதய காலம்
மேன்மையாய் தன்வந்த்ரிக்கு மூலமும் கூற
மங்கலமாய் "ஓம் ஸ்ரீ தம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்த்ரி பகவானே நமஹ"

who's Sittham is to Arise @ Maruderi and Sanctify
the right time is at the sunrise on the Saturday
with Greatness say the Moola mantra of Dhanvantri
with holiness  "OM SHREE DHAM SHREEM HREEM SHREE DHANVANTHRI BHAGAVANE NAMAHA"

பகவானை அகம்புறமும் இருத்தி வேண்டுவோர்க்கு
பிணிநாசம் சூட்சும இந்திரிய குறைகளும்
உகந்தவிதம் நிறைவேறும் மயக்கம் தீரும்
ஓதிட்ட சித்தர்முறை வேள்வி நன்றாய்

For those who meditate on him internally and externally
illness gets eliminated also disorder of Indriyas
will cure as expected and the giddiness of mind gets over
Thus per Siddhamargam do the Vaelvi (AgniHoma)

நன்றுபட சீந்தில்அதாம் ஆல் அரசு
நலமான வன்னியுடன் எருக்கும் கூட்டி
உன்னதமாய் வைத்தீஸ்வரனை முன் நிறுத்தி
உறுதிபட சர்வரோக நிவாரண பூசையப்பா

With the good Seenthil Aal and Arasu
and the good Vanni and Eruku including
With revered Vaitheeswaran deemed presence in front
is the Strengthening Sarvaroha Nivarana Poosai my Son

பூசைவிதி விக்கினத்திற்கு திசை தெய்வங்களுக்கு
பூரணமாய் குமரனுக்கு நவகிரகங்களுக்கு
இசைந்தவிதம் மும்மூர்த்தி தேவர் தலைவனுக்கு
தலைவனுக்கும் சித்தர் நாமம் ஓதி குருநாமத்தால் ஆகுதி

The Poosai thus is for Vikina (Ganesha) and lords of directions
with completeness to Lord Muruga and Navagraha
and for the Trimurthy with Devar's Head Indira
for the Head and Siddha's do Namam and Agudhi on Bhrigu's name for all

ஆகுதியால் அக்னிதர்மம் நிலைநிறுத்தும் அப்பா
அம்சமாதாய் மருந்தும் புடம்முறைகள் பாஷாணம்
வாகுடனே அன்னதலம் தொட்டு யாகமுறை
விளம்பிட சீந்திலதாம் கூட்டு மருந்தும்

With that Agudhi all Agnidharma will standardize
then on Medicines, Purification and Poisonous Management
Have the Homam done near the Annathalam
Also provide the Kootu Aushadham with Seenthil

மருந்தான சஞ்சீவி கிரதம் ஈய
மாந்தர்க்கு அறிவித்து பயன் விதமாய்
இருசதமேல் மானுடர்கள் ஒன்று கூடி
இப்பூசை தனிலே தூய்மை வாகடம்

The medicine thus is Sanjeevi kiratham (Kiratham is done using Ghee of Cow on Medicine)
highlight to members and issue them
thus more than 200 members will throng the place that day
Post which the place will be filled with Pure Medicines and related raw materials

வாகடத்தின் தலமாய் தீர்த்தம் நிற்கும்
விளம்பிட்ட தருணமதே பூசை நிறைய
சுகமாக அணிவகுத்து நின்றாசி செய்வோம்
சோதிவழி கண்டோர்க்கு சடங்கற்ற நிலையென்றாலும்

From then on the place of Theertha will become a Medicinal Theertham
as said for the puja's greatness and fullfillness
with pleasance together we all will be blessing then
There is no Agama formality for People who worship Jyothi... Yet

நிலைநிறுத்த வல்லசக்தி வேதத்தின் அங்கமப்பா
நிச்சியமாய் வல்லபலன் அமிர்தகலசம் கொண்டோர்
நல்லதொரு தூயபொருள் தானாய் கிட்டும்

To stabilize (externally/Internally) great Shakthi is a part of the Veda
For sure there are great benefits for those who have consumed from AmritaKalas (I)
The good things (E) will be obtained automatically
Links to this post

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.