செவ்வாய், 11 அக்டோபர், 2016

தன்வந்த்ரி - மருதேரி

DHANVANTRI-FOOD, MEDICINE AND SEEDS


தகையான சித்தர்முறை உணவும் மருந்தும்
தரணியிலே நுட்பம் அதாய் வரையறுக்க 
 
For Proper Siddhar methods on Food and medicine
In the world with details to group and categorize
 
-------------------------------------------------------------------------------

வரையறுக்க ஆசிரம தர்மம் ஒன்றாய்
விதிப்படியே கலியதனில் விஞ்ஞானத்தும் 
கரைகடந்த ஆற்றலத்தின் ஓர் துளியாய் 
குவலயத்தின் உயிர்வடிவாய் நின்றது எல்லாம் 

To categorize as one in ashram's dharma
as destined in kaliyuga by Scientific means
From beyond the great power as a drop
Manifested in worlds as different life forms (Seeds)

--------------------------------------------------------------------------------- 
நின்றதெல்லாம் வணிகநோக்கம் அடிமைநோக்கம் 
நிலைப்படுத்த கொண்டதொரு யுக்தி எல்லாம் 
நன்மைதரா சத்ரு மித்ரு நிலையறியா 
நிகழ்த்திட்ட விதியறியா செய்த மாற்றம் 

Those life forms (Seeds) are seen as business and employment opportunities
The ideas & methodologies used till now claiming stabilization (Increase Availability of Food)
Aren’t good due to the lack of understanding (+ and -)
Thus done are changes without an understanding of destiny and rules

------------------------------------------------------------------------------------------------
மாற்றமதால் உணவு வகை அமிர்தபாகமதில் 
மறைப்பான அசுரகுணம் உள் ஓங்கி 
உற்ற பிணி உயிரணுவாய் அறியவொணா 
உணர்வற்ற நிலைதன்னால் மருந்தும்  ஏற்கா 
 
Due to the changes in the Amrit Paga (Nectar of food)
The hidden Asura Guna (Toxic Nature) takes a raise inside (inside one's body)
Thus illness is not traceble by the life force atom
In body that will lack sensitivity and refuse medicine


--------------------------------------------------------------------------------------------------
ஏற்காத மானுடங்கள் பீடை பற்றி 
இயல்பான நிலைமாறி நின்றகுறை விலக 
பற்றிடும் எங்களது குடிலம் தன்னில் 
பூரணமாய் மானுடர்க்கு பயனளிக்கும் வகை 

For the bodies that are refused get inflicted
And stood different from natural state; for their cure
In our kudilam (Arul Nilayam - Bhrigu Muni)
By providing complete benefits to humankind

---------------------------------------------------------------------------------------------------
வகையான அகத்தெளிவும் மாயை நீங்க
வாகடத்தின் முதன்மையான சித்தர்கள் ரிஷிகள் 
தொகைப்படுத்த ஆதிமூல தன்வந்திரி தான் 
தலைமதில் எழுந்தருள ஆசி செய்தோம் 

By giving inner clarity that drives away Maya (uncertainity)
The Primary Rishis and Siddhas of Medicine
To Group and the Head of all is Dhanvantri
We blessed for him to raise and bless u all in Maruderi
--------------------------------------------------------------------

செய்தவிதம் ரவிநீச்ச காலம் தன்னில்
சிரத்தையுடன் உலகநலம் அடைய வேண்டி 
மெய்யுருக வேண்டியுமே மும்மூர்த்திகள் ஆசியுடன் 
மறைந்ததையே மீட்டெடுக்கும்  வல்லமைதான் இருக்கு 

Thus in month of Aipasi (Time when sun's power is less)
With deep dedication for the goodness of earth
Seek him with devotion; with Trimoorthi's blessings
To retrieve the irretrievable is the blessings


--------------------------------------------------------------------------------------
இருக்கவே மந்திரங்கள் நாத சித்தர் 
இறைநிலையில் சப்தமுடன் வெள்ளிச்சமாகி 
குருத்தலமாய் நின்றிருக்க ஆற்றலெல்லாம் கூடி 
குணங்கள் எல்லாம் மாறி பக்குவமாகும் +

Is the blessings if magical Nada Siddhas from
Their state of bliss express them as sound and light
As the places of Guru with all types of blessing and energy
Provide changes to the goodness of required


-------------------------------------------------------------------------------------------------

ஆகும்விதம் தன்வந்த்ரிக்கு சிறப்பு செய்ய
அமிர்தகலசமுடன் நீரம்சம் கொண்ட மாலோன் 
பகமதாய் தேவர்களுக்கு அவுஷத தலைவன் 
பிறப்பிற்கும் காப்பிற்கும் அதிபன் ஆவான் 

Thus by providing obeisance to Dhanvantri
The Malan who is of watery nature has the Amrit Kalas (Nectar Pot)
Provides the Ousadham part of nectar to Devars
The one who is responsible for birth and preserving

 ---------------------------------------------------------------------------------------------------
ஆனவிதம் அப்பூவிலே ஐந்தும் நிறைந்து
ஆண்பெண்ணாய் உயிராற்றல் பெறுக செய்து 
நான்கு யுகமதிலும் பல்லுயிரும் தொழுதுயேற்றும் 
நாதனையே எங்கள் உடன் கூடி 
 
He as the water has the panchabootha (5 elements) filled in it
As + and - (male and female) increases the life-force / energy
In all 4 yugas worshiped and praised by all living beings
Is the Nadhan who comes along with us here


---------------------------------------------------------------------------------------------------
கூடியே பரிமளிக்க இதுமேல் யோகமாம் 
His rendezvous will glitter and bring in great Yogam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.